விபச்சாரத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பாலியல் தொழிலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில் விபச்சாரம் சட்டப்பூர்வமாகப்பட்டுள்ளது. எனினும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது குற்றம். நாட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விபச்சாரத்துக்கு தடை விதிக்கும் வகையில் பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பிலான் முடிவு செய்துள்ளார். அதன்படி சட்ட மசோதாவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வரும் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசின் முடிவுக்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பு நேற்று ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசின் முடிவை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், விபச்சாரத்துக்கு தடை விதிக்கும் தீர்மானத்துக்கு பிரான்சில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட உள்ளனர் என்றனர்.
No comments:
Post a Comment