அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை விட அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அதிக சம்பளம் பெறுகிறார்.
அவுஸ்திரேலியாவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த அந்நாட்டின் சம்பள டிரிபியூனல் முடிவு செய்துள்ளது.
இதன்படி அந்நாட்டின் பெண் பிரதமரான ஜூலியா கில்லார்டுக்கு சம்பளத்தில் 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கிறது.
புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே 1 லட்சத்து 40 ஆயிரம் டொலர்களில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் டொலர்களாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதில் மற்ற செலவுகளும் அடங்கும்.
பிரதமரை பொறுத்தவரை மற்ற செலவுகளுடன் சேர்த்து 4 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும். இது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பெறும் சம்பளத்தை விட அதிகமாகும்.
ஒபாமா 4 லட்சம் அமெரிக்க டொலர்களும், கமரூன் 2 லட்சத்து 21 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment