Friday, December 2, 2011

ஈரானில் இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் விடுவிப்பு

ஈரானில் இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அணுசக்தி திட்டங்கள் தொடர்பான சர்ச்சையால் இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட சில நாடுகள் ஈரான் மீது கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈரான் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு எதிரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இங்கிலாந்து தூதரகத்தை மாணவர்கள் சிலர் அடித்து நொறுக்கினர். வாகனங்களை தீயிட்டு எரித்தனர். தூதரக பொருட்களை சூறையாடினர். இதுதொடர்பாக 11 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதலுக்கு பின் ஈரானில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டு எல்லா தூதர்களையும் இங்கிலாந்து வாபஸ் பெற்றது. அத்துடன் இங்கிலாந்தில் உள்ள ஈரான் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்து ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை ஈரானில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது.
இந்நிலையில் தூதரக தாக்குதலில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். அதற்கான காரணம் எதையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை ஈரானில் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் திடீரென 11 மாணவர்களை அரசு விடுவித்ததால் இங்கிலாந்து அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையில் அமைதியை குலைக்கும் இங்கிலாந்து எதிராக மாணவர்கள் நடத்திய தாக்குதல் வரவேற்கத்தக்கது என்று ஈரான் தலைவர் கமேனியின் பிரதிநிதி முகமது முகமதியன் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஆத்திரம் தாக்குதலாக வெளிப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜனி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment