Y குரோமோசம் இல்லாமல் ஆண் குழந்தை?
xx குரோமோசம் கள் இணைந்தால் பெண் குழந்தையும் xy குரோமோசம் கள் இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் Y குரோமோசம் இல்லாமல் ஆண் உயிரை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழக பேராசிரியர் பால் தாமஸ் என்பவர் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டு உள்ளார். அவர் s o x 3 எனும் மரபணுலை உருவாக்கி அதிலிருந்து xx குரோமோசம் களை கொண்டு ஒரு ஆண் எலியை உருவாக்கினார் . அந்த ஆண் எலி மற்ற எலிகளை போல் உடல்அமைப்பு பாலின உறுப்புகள் எல்லாம் சரியாக அமைந்து உள்ளது . ஆனால் அது மலட்டு தன்மையுடன் இருக்கிறது. இந்த கண்டு பிடிப்பால் மனித குலத்துக்கு ஆபத்து என்று அந்த பேராசிரியர் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment