Thursday, December 22, 2011

டயட் சோடா என்றாலும் இதயத்திற்கு ஆபத்து தான்

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டயட்  ‌சோடா குடிப்பதை  ஒரு பழக்கமாக வைத்திருப்பவர்கள்  தங்களை தாங்களேமாரடைப்பு நோய்க்கு உட்படுத்துகிறார்கள் என  கண்டறியப்பட்டு உள்ளது.
2011ல் நடந்த அனைத்து உலக மாரடைப்பு மாநாட்டில்   அமெரிக்க நாட்டு மாரடைப்பு சங்க ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை ஒன்றை  அளித்தனர். அந்த ஆய்வில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது.பல இனத்தை  256 4 நபர்கள்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.அவர்களை அவர்கள் ‌சோடா அருந்தும் முறையினை கொண்டு பல குழுக்களாக பிரித்தனர். சோடாவை ஒரு போதும் குடிககாதவர்கள். தினமும் சோடா குடிப்பவர்கள். டயட் சோடா குடிப்பவர்கள் , ரெகுலர்  சோடா    டயட் சோடா என மாற்றி மாற்றி குடிப்பவர்கள்  மிதமான அளவு குடிப்பவர்கள்   வழக்கமாக குடிப்பவர்கள்  என வகைப்படுத்தப்பட்டனர்.
y. ஆய்வில்  சோடா குடிக்காதவர்களை விட  தினமும் டயட் சோடா குடிப்பவர்களில்   48 விழுக்காடு நபர்கள்   9 ஆண்டு காலத்திற்குள் மாரடைப்புக்கோ அல்லது  இரத்த குழாய் சம்பந்தமான நிகழ்வுக்கோ உள்ளாகிறார்கள் என கண்டறிந்து உள்ளார்கள். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் வயது பாலினம் புகை பிடிக்கும் பழக்கம்  உடற்பயிற்சி   மது பழக்கம்  இரத்த நாள நோய்கள்  இதய நோய்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொண்டார்கள்.
எனவே சோடா  குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் அருந்துவது தான் சிறந்தது  எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment