
நெகிழ்வு தன்மையுள்ள ஜவ்வு போன்ற மெல்லிய அமைப்பில் இரண்டு உலோகத் தகடுகளின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படுகிறது.
ஒரு சதுர செ.மீட்டரில் 0.2 பாரடு அளவுள்ள சக்தியை சேமிக்க முடியும். மற்றவைகளில் 0.1 பாரடு அளவு சக்திதான் சேமிக்க முடியும்.
இதுபற்றி ஜியான் நிங் கூறுகையில், பற்றரி உலகில் இந்த புதிய கண்டுபிடிப்பு பெரிய புரட்சியை ஏற்படுத்தும். மற்ற பற்றரிகளுடன் ஒப்பிடுகையில் இதன் விலை மிகவும் குறைவு. அதே சமயத்தில் சிறிய பொருட்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை இதை பயன்படுத்தலாம்.
மருத்துவமனை ஓபரேஷன் தியேட்டர், காரில் உபயோகப்படுத்தப்படும் பற்றரிகள் ஆகியவற்றில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதை சந்தைக்கு கொண்டுவர அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை மெருகேற்றும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
No comments:
Post a Comment