Thursday, December 22, 2011

பெண்களின் மூளையில் காமகிளர்ச்சி ஏற்படும் பகுதிகளின் வரைபடம்


ஒரு பெண்ணின் மூளையில் பால் உணர்வுக்கான பகுதி எங்கு உள்ளது என்பது தற்போது வரைபடமாக்கப்பட்டு உள்ளது.உணர்ச்சி பீடம் (clitoris)கர்ப்பப்பைவாய்(cervix), பெண்பிறப்புஉறுப்பு, மார்பு காம்பு ஆகியவற்றை தூண்டினால் பெண்களின் மூளையில் எந்த பகுதிளில் பதில்வினை ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டு மூளை வரைபடமாக்கபட்டு உள்ளது .
கருப்பபைவாய் அல்லது பெண்உறுப்பு தூண்டுதலால் மூளையில் ஏற்படும் பதில்வினை பகுதி உணர்ச்சிபீட தூண்டுதலால் மூளையில் ஏற்படும் பதில்வினை பகுதியிலிருந்து மாறுபட்டது. பெண்உறுப்பு பகுதியில் ஏற்படும் தூண்டுதல்கள் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொத்கொதாக பலபுள்ளிகளாக பதில்வினை ஆற்றுகிறது. ஆண்களின் மூளையிலும் இதே பகுதியில்தான் ஆணுறுப்பு தூண்டுதலுக்கான பதில்வினை நடைபெறுகிறது.
ரட்ஜார்ஸ் பல்கலைகழக பேராசிரியர் பாரி கொமிசறுக், ”  ,மார்பககாம்பில் தூண்டுதல் ஏற்படுத்தியபோது மூளையில் ஏற்பட்ட பதில்வினை ,பிறப்புஉறுப்பில் தூண்டுதல் ஏற்படுத்தியபோது மூளையில் பதில்வினை ஏற்பட்ட பகுதியிலே ஏற்பட்டது “என தெரிவித்து உள்ளார். இது மார்பககாம்பு தூண்டுதல் ஏன் பாலுனரச்சியில் முடிகிறது என்பதனை விவரிக்க உதவும் எனவும் தெரிவித்து உள்ளார்
மேலும் காம்பு தூண்டுதலால் நெஞ்சு பகுதியில் செயல்கள் ஏற்படுகிறது.கூடுதலாக பிறப்பு உறுப்பிலும் செயல்கள் ஏற்படுகிறது.
உறவின் உச்சம் ,பாசப்பினைப்பு ,பாலூட்டுதல் ஆகிய வேளைகளில் ஊறும் ஹார்மோன் ஆனா ஆக்சிடசின் (oxytocin) , மார்பக காம்பு தூண்டுதலின் போதும் ஊறுகிறது. மார்பக காம்பு தூண்டுதல் கருப்பப்பை தனது பழைய நிலையை அடைய உதவுகிறது மார்பக தூண்டுதல் மறைமுகமாக பிறப்பு உறுப்பில் உணர்ச்சியினை தூண்டுகிறது . அதனால்தான் மேற்படி இரண்டு தூண்டுதல்களும் மூளையின் ஒரே பகுதியில் பதில்வினை ஆற்றுகின்றன

மேலும் மார்பககாம்பு நேரடியாக மூளையுடன் மின் இணைப்பு கொண்டுள்ளது.இந்த மின் இணைப்பு செல்லும் வழியும் , பிறப்புஉறுப்பில் இருந்து வரும் மின் இணைப்பு செல்லும் வழியும் மூளையின் மேற்பரப்பில் உள்ள புறணி(cortex) ஒருங்கிணைகின்றன .மேலும் ஒரே நேரத்தில் ஆச்சிடசின் சுரக்கும் மூளையின் இன்னொரு பகுதியினை தூண்டி விடுகின்றன. பேராசிரியர் பாரி கொமிசறுக், பெண்களை போல் ஆண்களின் மார்பு காம்பும் நேரடியாக மூளையுடன் மின் இணைப்பு கொண்டுள்ளதா
என்பதை ஆராய்ந்து வருகிறார்.

உணர்ச்சி பீடம் (clitoris)கர்ப்பப்பைவாய், பெண்பிறப்புஉறுப்பு, மார்பு காம்பு ஆகியவற்றை தூண்டுதல்கள் மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெவ்வேறு புள்ளிகளில் பதில்வினை செய்கின்றன .எனவேதான்உணர்ச்சி பீடத்தில் தூண்டுதலால் ஏற்படும் உச்சத்தை பிறப்பு உறுப்பினை தூண்டுவதால் ஏற்படும் உச்சத்திலிந்து வேற்படுத்தி பெண்களால் உணரமுடிகிறது.

No comments:

Post a Comment