Thursday, April 5, 2012

பல்துலக்குவதன் மூலம் இதய நோயை தடுக்கலாம்


பற்களை நாள்தோறும் சரியான முறையில் துலக்குவதன் மூலம் இதயத்தில் ஏற்படும் பக்ரீரியா தொற்றை தடுக்கமுடியும் என அயர்லாந்தின் றோயல் கல்லூரியும், பிரித்தானியாவின் பிறிஸ்டல் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய ஆய்விலிருந்து தெரியவந்திருக்கின்றது.
அதாவது உணவுகளை உட்கொண்ட பின்னர் சரியான முறையில் வாய், பற்களை சுத்தம் செய்யத்தவறுகின்றமையால் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும் Streptococcus gordonii பக்ரீரியாக்களின் வளர்ச்சி உண்டாகின்றது.
பின் இப் பக்ரீரியாக்கள் குருதியில் கலந்து இதயத்தை அடைவதன் மூலம் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இதயம் பாதிக்கப்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இப் பக்ரீரியாக்கள் மனிதனின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கின்றது என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment