
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள பிரிங்கம் பெண்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களில் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அதாவது அவர்களின் எடை 4.5 கிலோ முதல் 5.5 கிலோ வரை அதிகரித்து இருந்தது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment