
நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி மூலமும் ஓரளவு சர்க்கரை அளவை குறைக்க முடியும். இதற்கு நடை பயிற்சி, யோகா நல்லபலன் தரும்.
அடிக்கடி டென்ஷன் ஆகும் நபர்கள் என்றால் தியானம் செய்வது நல்லது. நீரிழிவை தடுக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிட கூடாது.
எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு கிராம் கொழுப்புச்சத்தும் 9 கலோரிகள் ஆக்கி விடும். ஒட்டு மொத்த கலோரிகளில் 10 சதவீதம் தான் கொழுப்பு இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் மாதம் ஒரு தடவை ரத்த பரிசோதனை செய்வது நல்லது. ரத்தத்தின் சர்க்கரை அளவுக்கு ஏற்ப நமது உணவு முறையை மாற்றிக் கொள்ள இது உதவும்.
நீரிழிவு நோய் வந்ததும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது.
No comments:
Post a Comment