Saturday, February 18, 2012

நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்

தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன.
அதனடிப்படையில் தினந்தோறும் மூன்று கப் பால் கலக்காத தேநீர் பருகி வருவதன் மூலம் இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேநீரானது தீங்கு விளைவிக்கும் கொலஸ்திரோலின் அளவையும், குருதியிலுள்ள சீனியின் அளவையும் குறைப்பதனால் மேற்குறித்த பிரச்சினைகள் பற்றி அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் தேநீரில் காணப்படும் பிறிதொரு உள்ளடக்கமாக காணப்படும் பிளேவனொயிட்(flavonoid) எனும் பதார்த்தம் இதய நாளங்களில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் தேநீரின் மூலம் உடலுக்கு 150-200mg வரையான பிளேவனொயிட் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment