Thursday, February 9, 2012

மைக்ரேன் தலைவலிக்கான அறிகுறிகள்

மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி மன உலைச்சலால் ஏற்படுகிறது. இந்த தலைவலி ஏற்பட்டால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாது.
இதனால் வாந்தி ஏற்படும். சத்தமும், வெளிச்சமும் வலியை இன்னும் அதிகப்படுத்தும். வாசனையான பொருட்கள் தலைவலியை உண்டாக்குகிறது.
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மைக்ரேன் தலைவலி ஏற்படுகிறது. தலையின் இரண்டு பக்கங்கள் அல்லது தலை முழுவதும் வலி ஏற்படும். வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வலி இருக்கும்.
சாதாரண தலைவலிக்கு நல்ல தூக்கம், வலி நிவாரண மாத்திரைகள், நிம்மதியான சூழல் என சின்னச் சின்ன விஷயங்களே குணம் தரும்.
ஆனால் வாரத்தில் 2 முறைக்கு மேல் வலி இருந்தாலோ, திடீரென்று தலைவலி அதிகமானாலோ மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
திடீரென்று தலைவலி அதிகமானால், காய்ச்சல், வலிப்பு, பார்வைக்கோளாறு, பேச்சுக் கோளாறு, கழுத்து விரைப்புத் தன்மை ஏற்படும். இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment