Tuesday, January 3, 2012

உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் கண்டுபிடிப்பு

குண்டாக இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் 123 ஹலோமீ டாட் காம் என்ற இணையத்தளம் செயல்படுகிறது.
அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. அந்த இணையத்தளத்தில் “எக்ஸ்.எல்.எஸ்&மெடிக்கல் பேட் பைண்டர்” என்ற பெயரில் புதிய வழி கூறப்பட்டுள்ளது.
சப்பாத்தி கள்ளி(விஞ்ஞான பெயர் - பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில் தயாரிக்கின்றனர்.
இந்த மாத்திரையை தினசரி 3 வேளை உணவுக்கு பிறகு தலா 2 மாத்திரை சாப்பிட்டு வந்தால் தினசரி கலோரி சேர்க்கையில் 500 கலோரிகளை குறைக்கிறதாம். இதனால் உடல் எடை எளிதாக குறைவது தெரியவந்தது.
இந்த கேப்சூல்களுடன் சரியான உணவு முறையை கடைபிடித்தால் குண்டான பெண்கள் விரைவாக ஒல்லியாக முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களிடம் இந்த கேப்சூல் அளித்து நடந்த ஆய்வில் கேப்சூலை சாப்பிடாதவர்களைவிட சாப்பிட்ட பெண்கள் 2 மடங்கு வேகமாக எடை குறைவது தெரியவந்தது.

No comments:

Post a Comment