Friday, January 20, 2012

சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்:

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கான்டாக்ட் லென்ஸ் மூலமாக அறிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் மைக்ரோசொப்ட் ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆராய்ச்சியில் தெரியவந்த முடிவுகள் குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது, கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக தனியாக எலக்ட்ரோடுகள் பொருத்தி கான்டாக்ட் லென்சை உருவாக்கும் பணியில் ஈடுட்டனர். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இதன் மூலமாகவே சர்க்கரையின் அளவை அறிந்து கொள்ளலாம். இம்முறை விரைவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment