Thursday, December 8, 2011

ஓன்லைனில் Image puzzle உருவாக்குவதற்கு

            படங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதை சேர்ப்பது ஒரு கலை தான், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் Image puzzle உருவாக்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்(நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவு 400×300 pixels இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்).
அடுத்து fun name என்பதில் ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு அடுத்து இருக்கும் Set how difficult it should be என்பதில் நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துவிட்டு Make it என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த படத்துடன் Image puzzle உருவாக்கப்பட்டிருக்கும்.
வலது பக்கம் இருக்கும் கட்டதை நகர்த்தி படத்தை சரியாக பகுதியில் கொண்டு சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment