| ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும். இது தவிர வேகப்படுத்தல், வேகத்தைக் குறைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் பயிற்சி கொடுக்க ஆராய்ச்சியாளர்கள் வழிகளை கண்டுபிடித்துள்ளனர். வாகன ஓட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலையில் பொருத்தியவுடன் வாகனத்திற்கு உத்தரவிடத் தொடங்கும். அந்த வாகனமும் 360 கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள் ராடார்கள் லேசர் சென்சார்களைக் கொண்டிருக்கும். ஒரு புற மற்றும் இரு புற சந்திப்பு வரும் இடத்தில் கார் தன்னைத் தானே செலுத்திக் கொல்லும். பின்னர் வடது, இடது பக்கம் வாகன ஓட்டியின் உத்தரவுப்படி திரும்பும். |
தகவல்களை தொகுத்து வழங்கும் தன்னிகரில்லா ஒரே ஒரு இணையத்தளம் World Bajaj உங்களை அன்புடன் அழைக்கின்றது,
Monday, December 19, 2011
மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment