Wednesday, December 14, 2011

உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு

உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்களை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
இந்த ரத்த அழுத்தமே பின்னாளில் இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியை பிரிட்டனிலிருந்து வெளியாகும் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹியூமன் ஜெனிடிக்ஸ் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
25,000க்கும் மேற்பட்டோரிடம் லண்டன் பல்கலைக்கழக்கத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணி மரபணுக்கள் தான் என்று தெரியவந்துள்ளது.
உணவுப் பழக்கங்கள், உணவில் அதிகளவு உப்பு சேர்த்தல், மது அருந்துதல் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும் மரபியல் தன்மைகளும் ஒரு முக்கிய காரணி என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பேராசிரியர் பாட்ரிசியா முன்ரோ தெரிவித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பு ரத்த அழுத்தத்திற்கான மருந்தை உருவாக்க உதவும் என்று அக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் கால்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment