Sunday, December 11, 2011

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

"ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.
அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.
அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.
அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.

No comments:

Post a Comment