
இந்த ஆய்வு முடிவை தகவல் அறியும் உரிமையில் பிலிப் மோரிஸ் சிகரெட் தயாரிப்பு நிறுவனம் கேட்டு உள்ளது. இந்த ஆய்வு முடிவை தருவதற்கு ஆய்வாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பூலிப் மோரிஸ் நிறுவனம் உலகப்பகழ் பெற்ற மார்ல் பரோ சிகரெட்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். இளைஞர்கள் விரும்பும் சுவை தெரித்தால் தங்களது தயாரிப்பில் அந்த நிறுவனம் குறிப்பிட்ட சுவையை சேர்த்தால் மேலும் அபாயம் விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இளைஞர்கள் எப்படி புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் சிகரெட் நிறுவனத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என ஸ்காட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து இருந்தது.
சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் எங்களது புள்ளி விவரங்களளை பெறுவதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அவர்களது முயற்சி எங்களது எதிர்வரும் ஆராய்ச்சிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும் என ஆய்வாளர் பேராசிரியர் ஜெரார்டு ஹாஸ்டிங்ஸ் கூறுகிறார்.
No comments:
Post a Comment