Friday, December 2, 2011

தினமும் உடற்பயிற்சி செய்தால் அதிகமாக சாப்பிடலாம்

 தினமும் உடற்பயிற்சி செய்தால் அதிகமாக சாப்பிடலாம் என்று தற்பொழுது நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவர் மிகைல் அலோன்சோ என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே இம்முடிவை இவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு நபர் தன் உடல் தன்மைக்கு ஏற்ற வகையில் முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவாரேயானால், அவர் எடுத்துக் கொள்ளும் உணவும் உடலுக்கு ஏற்ற விதத்திலான அளவிலேயே அமையும் என்பது தெரிந்த விடயம் தான்.
இப்போது நடைபெற்ற ஆராய்ச்சியில், அது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, உணவின் தரமும், அளவும் கூடுதலாகும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் அளவு கூடுதலானால் உட்கொள்ளும் உணவின் தரம், அதாவது சத்து நிறைந்த உணவு கூடுதலாக உண்ணப்படுகிறது.
தசைரீதியான உடற்பயிற்சிகள் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது. உடல் எடைக் குறைப்புக்காக செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடல் பருமனைக் குறைக்கின்றன. அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை நீண்ட காலத்துக்குப் பின்பற்றி வந்தால் நல்ல பலனைத் தருகின்றன.
முந்தைய ஆராய்ச்சிகளின் மூலம் உடற்பயிற்சிகள் மூளைக்கு நல்ல விளைவை அளிப்பது தெரியவந்தது. குறிப்பாக உடலுக்கு வலுவை அளிக்காத உணவை உண்பது தவிர்க்கப்பட்டது.
உடற்பயிற்சிகளின் விளைவாக மூளையிலுள்ள சாம்பல் நிறப் பகுதிகள் அதிகரிப்பது இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment